HomeCulture & Travel › ahobila_yathrai

Cover of ahobila_yathrai

ahobila_yathrai

கைலாஷி

FormatEbook
Published2017
LanguageTamil
ReadingIncluded
Full text being prepared Keep a copy ₹9
About this book
முன்னுரை : மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருப்பதிகள் நூற்றெட்டாகும் . இவற்றுள் இரண்டு திருப்பதிகள் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளன . அவற்றுள் ஒன்று நரசிம்ம க்ஷேத்திரமான அஹோபிலம் ஆகும் . சீரிய சிங்கப்பிரான் உறைகின்ற திருக்கோவில் இச்சிங்கவேள் குன்றம் என்ரழைக்கப்படுகின்றது . திருமங்கையாழ்வார் பாடிப் பரவி மகிழ்ந்த திருத்தலம் இத்திவ்யதேசம் . இத்திருப்பதி எம்பெருமான் நரசிங்கமூர்த்தியாய் தம் பக்தன் பிரகலாதன் பொருட்டுத் தோன்றி அவனை நைந்து வந்த தந்தை இரணியணை தனது வஜ்ர நகங்களால் பிளந்து மாய்த்த இடம் என்று திருமங்கையாழ்வார் கொண்டாடுகின்றார் . இங்கே பெருமாள் நவநரசிம்மராய் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் . ஸ்ரீராமனும் , வேங்கடேசரும் வழிபட்ட பெரிய பெரிய பெருமாள் அஹோபிலம் நரசிம்மர் , பெரிய திருவடியாம் கருடன் தவம் செய்து நரசிம்மர் தரிசனம் பெற்ற திருப்பதி , கபாலிகர்கள் ஆதி சங்கரை கொல்ல முயன்ற போது அவரை காத்து ஸ்ரீநரசிம்ம கராவலம்பம் பாட வைத்த கருணாமூர்த்தி இவர் வேதங்கள் தவம் செய்த தலம் . வைணவம் வளர பாடுபட்டு வரும் அஹோபில மடம் அமைந்துள்ள க்ஷேத்திரம் . உக்ர க்ஷேத்திரம் , வீர ஷேத்திரம் , அஹோபிலம் , அஹோபலம் , சிங்கவேள்குன்றம் என்று பல நாமங்களினால் அறியப்படும் அஹோபிலம் என்று இத்திருப்பதியின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் . சிங்கத்தை நாம் எங்கே சந்திக்க முடியும் அதன் குகையில்தானே ? அதுபோலத்தான் சிங்கபெருமாள்களை மலைக்குகைகளில் சென்று சேவிக்க நாம் அஹோபிலம் செல்ல வேண்டும் . இரண்டு தளங்களாக அடிவாரத்திலும் மலைகளிலும் நவநரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளன . காடு , மலை , ஆறு , அருவி என்று அலைந்தால்தான் நாம் அனைவரையும் சேவிக்க முடியும் . மலையேற்றமும் அவசியம் . அவனருளால் இவ்வாறு மூன்று நாட்கள் சுற்றி நவநரசிம்மர்கள் அனைவரையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்நூல் . மேலும் நரசிம்ம வழிபாடு பற்றி அடியேன் படித்து மற்றும் கேட்டு அறிந்து கொண்ட பல தகவல்கள் அன்பர்களின் உதவிக்காக இப்புத்தகத்தில்

More in Culture & Travel

Browse all →