Home › Literature › அப்துல் கலாமின் கவிதைகளும், மேற்கோள்களும்
அப்துல் கலாமின் கவிதைகளும், மேற்கோள்களும்
Full text being prepared
Keep a copy ₹9
About this book
என்னுரை இந்தியாவில் உனக்குப் பிடித்த விஞ்ஞானி யார் என்று பள்ளிக்குழந்தைகளிடம் கேட்கும்போது அப்துல்கலாம் என்கின்றனர் . 5 வயது குழந்தைகள் கூட அப்துல்கலாமின் பெயரைத் தெரிந்து வைத்துள்ளனர் . அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல . அவர் இந்தியாவின் ஜனாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார் . சிறந்தப் பேச்சாளர் , மனித நேயம் மிக்கவர் , சுமூகப்பார்வைக்கொண்டவர் . அவர் ஒரு எழுத்தாளரும் கூட . அத்துடன் அவர் பல கவிதைகளையும் எழுதியுள்ளார் . அவர் பள்ளிக்குழந்தைகளை மிகவும் நேசித்தார் . நாடு முழுவதும் சென்று மாணவர்களைச் சந்தித்தார் . மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் மட்டுமே இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்கின்ற எண்ணம் கொண்டவராக இருந்தார் . மாணவர்களைச் சந்திக்கும் போது அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார் . அவை சிறந்த மேற்கோள்களாக விளங்குகின்றன . இந்த புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் , இந்தப் புத்தகத்தை பிழைதிருத்தம் செய்து கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு S. நமசிவாயம் அவர்களுக்கும் , தட்டச்சு செய்து கொடுத்த செல்வி ந . மு . கார்த்திகா அவர்களுக்கும் எனது நன்றி . இந்த புத் த கத்தை மின்னூலாக வெளியிட்ட Freetamilebooks.com மிற்கும் எனது நன்றியைத் தெவித்துக் கொள்கிறேன் . வாழ்த்துகளுடன் ஏற்காடு இளங்கோ